/ அரசியல் / சமயங்களின் அரசியல்
சமயங்களின் அரசியல்
தமிழகத்தில் மதங்களுக்குள் உள்ள அரசியலை ஆராய்ந்து கருத்துக்களை தரும் நுால். பக்தி இயக்கம் சார்ந்து தெளிவான சிந்தனையை முன்வைக்கிறது.இரண்டு பகுதிகளாக உள்ளது இந்த நுால். முதலில் சமயங்களின் அரசியல் என்ற கருத்தை ஆய்வு செய்து தகவலை தொகுத்துள்ளது. இரண்டாவது, சமயங்கள் பற்றிய உரையாடலாக உள்ளது. சுந்தர்காளி என்பவர் உரையாடல் நடத்தி பதிவு செய்துள்ளார்.தமிழகத்தில் சமயங்கள் குறித்து தெளிவான பார்வையை ஏற்படுத்தும் வகையில், தெளிவான கருத்துக்களை தருகிறது. சமண, பவுத்த சமயங்களின் வீழ்ச்சி பற்றியும் ஆராய்ந்து தெளிவு ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் சமய நம்பிக்கைகள், சடங்குகள் பற்றி ஆராய்ந்து ஆதாரங்களுடன் கருத்தை வெளியிட்டுள்ள நுால்.– ஒளி