/ வரலாறு / சமுதாய மேம்பாடு
சமுதாய மேம்பாடு
வன்னியர் சமுதாய மேம்பாட்டுக்கு உழைத்தோரின் வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். அரிதான தகவல்களை தருகிறது. பொருளாதார நிலையிலும், வாழ்க்கை தரத்திலும் வன்னியர் சமுதாய உயர்வுக்கு வழிகாட்டும் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. தலைவர்களின் போராட்ட வரலாற்று தடங்களை குறிப்பிட்டு பங்களிப்புகளை அறியச் செய்கிறது. வன்னியர் சமூக போராட்டக் களங்களில் உயிர் நீத்தோரை நினைவூட்டுகிறது. அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், தியாகி நாகப்ப படையாட்சி, புன்னமை தியாகராயர், சங்கர கந்தசாமி கவுண்டர், சிவசிதம்பர ராமசாமி படையாட்சி போன்றோர் பங்களிப்புகளை விரிவாக முன்வைக்கும் நுால். வன்னிய சமூக எழுத்தாளர் கருத்துகளை தொகுத்து தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




