School Dictionary
வெளியீடு : யங்மைண்ட்ஸ் பப்ளிஷர்ஸ். 32பி, கிருஷ்ணா தெரு, தி.நகர். சென்னை - 17.( பக்கம் : 540) மொத்தம் 20 ஆயிரம் வார்த்தைகளுக்கு பொருள் காண உதவும் அகராதி. ஆங்கில விளக்கம், அதற்கு ஈடான தமிழ்ச் சொல் மற்றும் விஞ்ஞான மற்றும் ஆட்சிச் சொற்களுக்கு விளக்கம் ஆகியவை தரப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்ச்சொற்கள் விளக்கத்தில் சில வடமொழி வார்த்தைகள் தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லாதவையும் இடம் பெற்றிருக்கின்றன. நிதார்த்தம், உத்தியோகஸ்தன், இப்படிச் சில. இப்போது அதிகம் புழங்கும் ஸ்டாக் புரோக்கர் என்ற ஆங்கில வார்த்தைக்கு "வியாபாரி, வர்த்தகன், சர்க்கார் பத்திரங்களில் வியாபாரம் செய்பவன் என்றிருக்கிறது. ஆங்கிலம் அதிகளவில் புழங்க ஆரம்பித்த பின், தமிழில் அதற்கு இணையான சொல், அதுவும் பழகு தமிழ்ச் சொல் காண்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை இந்த அகராதியைப் பார்க்கும் போது தெரிகிறது. இருந்த போதும் தமிழ் வளர இது உதவும்.