/ கதைகள் / சீவக சிந்தாமணி ஓர் அறிமுகம்
சீவக சிந்தாமணி ஓர் அறிமுகம்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கு உரையுடன் அமைந்த நுால். நச்சினார்க்கினியர் உரையை மேற்கோளாக்கியுள்ளது. திருத்தக்கதேவர் சமணக் கொள்கையோடு படைத்திருந்தாலும், சிந்தாமணி போல் கேட்டதை தரும் என விவரிக்கிறது. முக்தியை பாடினாலும், அகச்சுவை காதலை அதிகம் காட்டியுள்ளதால், கையில் நெருப்பு ஏந்தி துாய்மையை நிரூபிப்பதாக உள்ளது. ஐங்கணைக்கிழவன் மன்மதன், ஆடைப் பெட்டி கலிங்க கடகம், அங்குழலாள் சுரமஞ்சரி, ஏழு முறை வரும் கன்னி போன்ற சொற்களுக்கு விளக்கம், உரையின் சிறப்பை பறைசாற்றுகிறது. வாழ்க்கையை மெருகேற்றும் உண்மைகளும், கோட்பாடுகளும் நிறைந்த சீவக சிந்தாமணி உரையின் சிறப்பை அறிமுகம் செய்யும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்




