/ வரலாறு / செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்
செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரத்தில் பண்டை கால வாழ்வியல் கூறுகள், இசை, பண்பாட்டு மரபு, வரலாற்று தகவல்களை வெளிப்படுத்தும் நுால். சிலப்பதிகாரம் தொடர்பாக பெறப்பட்ட சான்றுகளை ஆய்வு செய்து, வலுவான கருத்தை முன்வைக்கிறது. காப்பியத்தில் காட்சி விளக்கங்கள் தருவதோடு, நிலவியல் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டிருப்பதை தெரிவிக்கிறது. காப்பிய சுவைக்கு உதவும் கதைமாந்தர் தன்மைகளையும் நுணுக்கமாக ஆய்ந்து புரிதலை தருகிறது. பாட்டுத் திறம், இலக்கிய உத்தி, உவமை நலன், காப்பிய கட்டமைப்பு, காதை அமைப்பை விளக்கி கூறுகிறது. சிலப்பதிகார கலைக்களஞ்சியமாக ஒளிர்ந்து நிற்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




