/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் – 2

₹ 150

ஆங்கில இலக்கியத்தில் முடிசூடா மன்னன் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை கதை வடிவில் தொகுத்து தரும் நுால். புகழ் பெற்ற ஆங்கில நாடகங்களை கதை வடிவில் தந்திருப்பது பாராட்டுக்கு உரியது.பன்னிரண்டாம் இரவு, ரோமியோவும் ஜூலியட்டும், ஜூலியஸ் ஸீஸர், அந்தோணியும் கிளியோபாத்ராவும், நான்காம் ஹென்றி என, ஒன்பது நாடகங்களின் கதைகள் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஆறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கதை துவங்கும் முன் சுருக்கம் தரப்பட்டுள்ளது. இது வாசிப்பை இனிமையாக்குகிறது. ஷேக்ஸ்பியர் கதைகள் திரைப்படங்களில் கையாளப்பட்டு இருப்பதை உறுதி செய்கிறது. எல்லா வயதினரும் படிக்க வேண்டிய நுால்.– ஊஞ்சல் பிரபு


முக்கிய வீடியோ