/ கட்டுரைகள் / சித்தர்களின் சாகாக்கலை
சித்தர்களின் சாகாக்கலை
நல்ல ஒழுக்கம், சரியான உணவு முறையை போற்றினால், உடம்பை தக்க முறையில் பாதுகாக்கலாம் என்று அறிவுரைக்கும் நுால்.மொத்தம், 15 தலைப்புகளில் சித்தர்களைப் பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறது. ஆன்மாவின் உடல்கள், மரணம் ஒரு விளக்கம், சித்தர்களின் முக்தி நிலை, பிறவா நெறி, இறவா நெறி போன்ற தலைப்புகளில் விளக்குகிறது. உடலில் ஏற்படும் நோய், அவற்றை நீக்கும் உணவு வகைகளை பட்டியலிடுகிறது. இறைவனை அடைவதையே பேரின்பமாகக் கருதும் சித்தர்கள், சாகாக் கலையின் பயன் பற்றி அறிவுறுத்தியுள்ளது. ஆய்வு செய்வோருக்கு பயன்படும் நுால்.– புலவர் இரா.நாராயணன்