/ இலக்கியம் / சித்தர் களஞ்சியம்

₹ 160

கற்பகம் புத்தக நிலையம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 300 ) சித்தர்களின் இலக்கணம், சித்தர்களின் வரலாறு, வல்லமை, ஜோதிடம், வானியல், கடவுள் கொள்கை, இல்வாழ்க்கை, மோனம், குண்டலினி, கிரியா பிராண யோகம், சித்தர்களின் திருத்தலங்கள் வழிபாடு, பூஜை முறைகள், மந்திரங்கள் மற்றும் பல விவரங்கள் அடங்கிய முழுமையான நூல் என்று அடையிலேயே அச்சிட்டிருக்கின்றனர். யார் இந்த சித்தர்கள் என்பதில் தொடங்கி, சமுதாயச் சிக்கல்களும் சித்தர் ஆய்வு தீர்வுகளும் என்பது முடிய முப்பத்தோரு தலைப்பு களில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். எளிதில் புரியும் நடை, எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் என்று சிந்தித்து உழைத்து நூலைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர். பதினெட்டுச் சித்தர்களின் பெயர்கள், வாழ்ந்த ஆண்டுகள், பிறந்த நட்சத்திரங்கள், அவர்களுக்கான திருத்தலங்கள், எல்லாம் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பதினெண் சித்தர் தவிர மேலும் இருபத்தைந்து சித்தர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களும் மிக நல்ல அச்சமைப்பு, கட்டமைப்பு, வண்ணம், வடிவம் என்று நூல் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், யோகியை யேகி என்று அச்சிட்டுள்ளது போல் சிற்சில எழுத்துப் பிழைகள் நூலில் தென்படுகின்றன. சித்தர் கலைகளைப் போதிப்பதும், அவற்றை மெருகூட்டி அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்லுவதும் தமது நோக்கமாக நூலாசிரியர் கைலாஷ்நாத் குறிப்பிட்டுள்ளார். வாங்கிப் படித்து வாழ்வில் பயனடையலாம்.


முக்கிய வீடியோ