/ தமிழ்மொழி / சித்தர்கள் பாட்டு
சித்தர்கள் பாட்டு
பக்கம்: 420 சித்தர்கள், 16 லட்சம் பாடல்கள் பாடியிருப்பதாக, ஒரு பாடலில் குறிப்பு காணப்படுகிறது. அவற்றில் அகப்பட்டவை, 2 லட்சம் பாடல்களே. அந்த இரண்டு லட்சத்திலும், 1,060 பாடல்கள் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.சித்தர் பாடல்கள் சாதாரண மக்களுக்குப் புரியாததுபோல், அவற்றிற்கான விளக்க உரையும் புரியாது!யோக அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். திருமந்திரம் (திருமூலர்) ரகசியம் வெளியாகிறது என்ற இரண்டு கட்டுரைகளுடன் கூடிய இந்த நூல், சித்தர் இலக்கியத்தில் பயிற்சியும், ஈர்ப்பும் உடைய அன்பர்களுக்கு ஒரு பெரும் கொடை.