/ கதைகள் / சிகரம்(நாவல்)
சிகரம்(நாவல்)
இலங்கை தமிழ் மணக்கும் நாவல் இது. மலையக தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் விதமாக அமைந்த இந்நாவலின் ஆசிரியர் திருமதி.மாலதி பாலேந்திரன் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர். இது அவருடைய முதல் நாவல் என்றாலும் கதை ஓர் தெளிந்த நீரோடைபோல் நகர்கிறது. மலையக மக்களின் வாழ்க்கையில் கண்ட சில உண்மைச் சம்பவங்களைக் கொண்டு தன் இயல்பான கற்பனைத் திறனால் கதை பின்னியிருக்கிறார். தொழிலாளர்களும் அவர்கள் குடும்பமும் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும் என்ற அவருடைய நியாயமான ஆதங்கம் நாவலில் வெளிப்படுகிறது. குறிப்பாகப் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார். குடியினால் குடும்பம் குதூகமில்லாமல் துன்பப்படுவதை நாவல் விவரிக்கின்றது.




