/ இலக்கியம் / சிலப்பதிகாரத்தில் யாழும் ஊழும்
சிலப்பதிகாரத்தில் யாழும் ஊழும்
சிலப்பதிகாரம் காப்பியத்தை புதிய கோணத்தில் அணுகி தகவல்களை தந்துள்ள நுால். கானல் வரி முதல், யாழ் என்ற உருவமுள்ள கதாபாத்திரத்துடன் அருவமாக உள்ள ஊழ் நட்பு கொள்வதை எடுத்துரைக்கிறது. அது யாழை நிலைகுலைய வைத்து தடுமாறச் செய்யும் கோலங்களை இசையின் வழியாக தெளிவாகக் காட்டுகிறது. காப்பியத்தின் ஒவ்வொரு பகுதியையும் உணர்ந்து அனுபவிக்கத்தக்க வகையில் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்துகிறது. சிலப்பதிகார நாடக காப்பியத்தை புதிய கோணத்தில் அணுகி, காட்சிகளை ஆராய்ந்து சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது. சிலப்பதிகாரம் அறிமுகத்துடன் துவங்கி, கதை சுருக்கம், படைப்பின் நோக்கங்கள், கதாபாத்திரங்கள், நாடக உத்திகள் என்ற தலைப்புகளில் அமைந்துள்ள நுால். – மதி




