/ வாழ்க்கை வரலாறு / சிந்தா நதி

₹ 300

வாழ்வில் இளமைப்பருவ நினைவுகளை சிறுகதை போல சித்தரிக்கும் சுயசரிதை நுால். வனப்பு மிக்க வார்த்தைகளை கோர்த்து வடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1989ம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருதை வென்ற இந்த புத்தகம், 48 பகுதிகளாக அமைந்துள்ளது. எழுத்தாளரின் இளமைப் பருவத்தில் அனுபவ நிகழ்வுகள் அடிப்படையில் ஒவ்வொன்றும் சிறுகதை போல் அமைக்கப்பட்டுள்ளது. மனதின் ஆழத்தில் இருக்கும் பிணைப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. கவிதை வடிவிலும் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன. வண்ணங்களை பூசிய சொற்களை கோர்த்தது போன்று உயிர்ப்புடன் திகழ்கின்றன. மன ஆர்ப்பரிப்பை தக்க உவமை களின் வழியாக வெளிப்படுத்துகின்றன. அனுபவத்துடன் உணர்வும் கலந்து கிளர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. நினைவை வித்தியாசமாக வெளிப்படுத்தும் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை