/ கதைகள் / சிந்திக்கத் துாண்டும் சிறுகதைகள்
சிந்திக்கத் துாண்டும் சிறுகதைகள்
புதிய பாதையில் சிந்தனையைத் துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 18 கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒரு கருத்தை உணர்த்தும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறது. பிரசாரமாக எடுத்துக் காட்டாமல், மனதில் உணர்த்தும் விதமாக இருப்பது அருமை. பாடத்தை தேர்வு செய்து படித்து, சாதனையாளனாக மாறும் விதத்தை காட்டும், ‘சாதனை படைத்தவன்’ கதை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டியதை விளக்குகிறது.வாழ்க்கையில் துன்பங்களை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதை, அலை இல்லாத கடல் இல்லாதது போல் பிரச்னை இல்லாத வாழ்க்கை இல்லை என நுட்பமாக உணர்த்துகிறது. வாசகனுக்கு அனுபவத்தை தருவதாக அமைந்துள்ள சுவாரசியமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு