/ கதைகள் / சிறந்த இந்­தியப் பெண் எழுத்­தாளர் கதைகள்

₹ 180

இவை பெண்­களால் எழு­தப்­பட்ட கதைகள் மட்­டு­மல்ல; பெண்­களின் பிரச்­னை­க­ளையும் பேசும் கதைகள். ‘பிரி­வினைக் கிணறு’ – பத்மா சச்தேவ் எழு­திய டோக்ரி மொழிக் கதை. அகதிப் பெண்­க­ளுக்கு நேரும் பாலியல் அவ­லங்­களைச் சொல்லும் கதை.‘அவளும் தான்’ – வாசி­ரெட்டி சீதா­தேவி எழு­திய தெலுங்கு கதை. மேல­தி­கா­ரியின் சீண்­டல்­க­ளுக்கு ஆளாகும் அலு­வ­லக அப­லை­களை பற்­றிய கதை. இந்த தொகு­தியில் சேர்க்­கப்­பட்­டுள்ள இரு தமிழ் கதை­க­ளுமே அரு­மை­யா­னவை. ‘ஒப்­பனை’ – தில­க­வதி எழு­தி­யது.‘போக வேண்­டிய தூரம்’ – லதா ராம­கி­ருஷ்ணன் (அநா­மிகா) எழு­திய கதை. இரவில் வெகு­நேரம் ஆன நிலையில், தனி­யாக வீட்­டுக்கு போக­வேண்­டிய நிலையில் ஒரு பெண். இயற்கை உபா­தையை கழிக்க வேண்­டிய அவஸ்தை. வழியில் எங்கும் பொதுக்­க­ழிப்­பிடம் இல்லை. இந்த சங்­க­டங்­களை நெகிழ வைக்­கும்­படி எழுதி உள்ளார். இவை எல்லாம், தமிழில் எழு­தப்­பட்­ட­வையோ என்ற பிர­மிப்பை ஏற்­ப­டுத்தும் வண்ணம், மொழி­பெ­யர்ப்பு அத்­தனை அருமை!படிக்க படிக்க பரம சுகம்!எஸ்.குரு


சமீபத்திய செய்தி