/ வர்த்தகம் / சிறுதொழில் செய்யுங்கள்

₹ 80

ஓய்வு நேரத்தில் சிறுதொழில் செய்து, குடும்ப நிதிப் பற்றாக்குறையை சரி செய்ய வழிகாட்டும் நுால். காலத்திற்கேற்ப தொழிலும், கை நிறைய வருமானமும் ஈட்டும் வழிகளை கூறுகிறது. கண் மை, பூட் பாலிஸ், விளக்கெண்ணெய், ஹேர் கிரீம், வாஷிங் சோப்பு, வாசனை சோப்பு, வாசனை விபூதி, பாத்திரம் கிளீனிங் பவுடர் என உற்பத்தி முறைகளை விளக்குகிறது. தொழில் துவங்குவோருக்கு உதவியாக அமையும் செய்திகளை கூறுகிறது. சிட்கோ, தொழில் முதலீட்டு கழகம், தொழில் மேம்பாட்டு கழகம் போன்ற அரசு நிறுவனங்களில் கடன் பெற வழி காட்டுகிறது. தொழிலுக்கு தேவையான, இயந்திர சாதனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கிடைக்குமிடங்கள் பற்றியும் உள்ளது. சிறு தொழில் முனைவோருக்கு பயன்படும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து


முக்கிய வீடியோ