சிவ தரிசனம்
பக்கம்: 192 காலத்தால் மூத்த சிவ வழிபாட்டை விளக்கும் நூல். சிவன், கணபதி, முருகன், நடராஜர் போன்ற தெய்வ வழிபாட்டின் தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளோடு ஆசிரியர் சிறப்பாக விளக்கி உள்ளார்.சிவன் உயர்ந்த தபஸ்வீ. மங்கலம் என்பது சிவனுக்கு மட்டுமே பொருந்தும். சக்தி மூலம் சிவனை அடைய முடியும். சிவன் வெளிப்படுத்திய ஞானத்தின் உருவே முருகன். தபஸ்வீக்களின் தலைவரானவர் சிவன். எளிமையான துறவு வாழ்வே சைவ வாழ்வாகும். அதனால் தான் வேதங்கள், "திடகாத்திரமான உடலோடு அனுபவித்து, முழுமையான வாழ்வை இறைவனுக்கு சமர்ப்பிப்போம் என்கின்றன. இப்படி பல ஆற்றொழுக்கான கருத்துக்கள் நூல் முழுவதும் உள்ளன.வேதம் தற்காலத்திற்கு ஏற்றதல்ல என்ற கருத்தை புறந்தள்ளும் ஆசிரியர், "எதிரிகளும் வாழ வேண்டும்; ஆனால், அவர்கள் கொடூர எண்ணம், நல்ல குணமாக மாற வேண்டும் என்ற வேதத்தின் விழுமிய கருத்தையும் சுட்டிக் காட்டுகிறார்.ஆன்மிகத்தையும், பாரத பண்பாட்டு பதிவுகளையும் விளக்கும் நூல்.