/ ஆன்மிகம் / சிவன் கோயில்களின் பெயர் வரக் காரணங்கள்!

₹ 300

தமிழகத்தில் உள்ள 158 சிவன் கோவில்களின் பெயர் காரணத்தை விளக்கும் நுால்.சிவனின் பாம்பு ஆபரணம், நந்தி வாகனம், ஆகாய கங்கை, நெற்றிக்கண் என்ற அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆனந்த தாண்டவத்தின் தத்துவம் மற்றும் பிரபஞ்ச சக்திகளை இணைத்து நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ள செய்தியை கூறுகிறது.சித்ரா பவுர்ணமியில் விண்ணில் தோன்றிய சிவன், அமுதத்தை தெளித்ததால், ‘மதுரை’ என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சுந்தரர்- திருமணம் மகிழ மரத்தினடியில் நடந்த போது, கால்களை பின்னோக்கி ஒற்றி வைத்ததால் அந்த இடம், ‘திருவொற்றியூர்’ என்ற பெயர் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இது போல் சுவையான தகவல்கள் உடைய நுால்.– முனைவர் கலியன் சம்பத்து