/ ஆன்மிகம் / சிவபூமியாம் இலங்கை

திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய திருகோணமலை, திருக்கேதீசுரம் ஈழ நாட்டு சிவத்தலங்கள். சைவ பக்தி மிக்க யாழ்ப்பாணத் தீவுக்கு அருகில் உள்ள, காரைத் தீபத்தில் வாழ்ந்து சமாதி அடைந்தவர் சுவாமி முருகேசப் பெருமாள். இவர் தன் அருள் ஆற்றலால் பல அற்புதங்கள் செய்து காட்டியவர். பலருக்கும் ஞான வழிகாட்டிய மகான். இவரது ஆசிரமத்தில் வாழும் பெண் அடியார்களுள் தலைசிறந்த தவச் செல்வி மேருபுத்திரி. இவர் இயற்றிய தெய்வப் பாடல்களைக் கொண்டது இந்நுால். இவரது பாடல்களில் சைவ சித்தாந்தம் ஒளிவீசுகிறது.மீனாட்சி வணக்கத்தில், ‘அண்டம் எல்லாம் படைத்துக் காத்து அருள் செய்யும் அங்கயற்கண்ணி மீனாட்சி அம்மையே... வண்டல் வினை தீர்த்து வாரி அணைத்துக் கரை சேர்த்திட்ட நின் அருள் யார் அறிவார்’ என்று பாடியுள்ளார்.‘இடரினும் தளரினும்’ எனும் பாடல் (பக்.39) திருஞானசம்பந்தர் தேவாரத்தை நினைவூட்டுகிறது. சிவபூமி இலங்கையின் தமிழன்பைக் காட்டும் மேருபுத்திரி பாடல்களைப் போற்றலாம்!– முனைவர் மா.கி.இரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை