/ கதைகள் / சிவப்பு சேலைக்காரி

₹ 100

கடல் சார்ந்து வாழ்வோர் குணநலன்களை அடிப்படையாக கொண்ட சிறுகதை தொகுப்பு நுால். மூதாதையர் பண்பாடு, சடங்கு முறை போன்ற கிராம நிகழ்வுகளை, ‘தேர்த் திருவிழா’ கதை நுட்பமாக விளக்குகிறது. கடலை நம்பிய மக்களின் போராட்டம், சிக்கல்களை, ‘கண்ணீர் கடல்’ கதை பகிர்கிறது. அதிகார பின்புலம் குறித்து கூறும், ‘தங்க வளையல்’ கதை, மனசாட்சியை உலுக்கும் வகையில் உள்ளது. பெண்ணின் மென்மையை, ‘தலைப்பு செய்திகள்’ கதை பேசுகிறது. கல்லுாரி வாழ்க்கையை துாசி தட்டும் வகையில், ‘ஒரு புதுக்கவிதை’ கதை நினைவூட்டுகிறது. சமூக ஒழுங்கை செதுக்கும் சிற்பியாக ஆசிரியர் இருக்க வேண்டும் என, ‘ஓராயிரம் சிறகுகள்’ கதை சுட்டிக் காட்டுகிறது. சமூக நிகழ்வுகள் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள கதை நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை