/ கதைகள் / சொல்லெல்லாம் முள்ளாகலாமா?
சொல்லெல்லாம் முள்ளாகலாமா?
பணமே பிரதானம் என எண்ணும் சமுதாயத்தில், குணம் மட்டுமே உன்னதம் என வாழும் குடும்பத்தை மையமாக உடைய நாவல் நுால். சாதாரண பூக்காரியின் மகள்கள் தானே... என குற்றமற்ற, குணக்குன்றாக விளங்கும் இரண்டு பெண்களை சமூகம் எப்படி எள்ளி நகையாடுகிறது என்ற உண்மையை வெளிச்சமிட, உள்ளது உள்ளபடி படைக்கப்பட்டுள்ளது. ஏளனம், தாழ்வு மனப்பான்மையை புகுத்தி நிலைகுலைய செய்துவிடும் என்பது அலசி ஆராயப்பட்டுள்ளது. ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்கள், சாதித்தே ஆக வேண்டும் என வெறித்தனம் மேலோங்க, எதையும் செய்யத் துணிந்து, வியந்து போற்றும் வகையில் உயர்ந்து நிற்பதை தெளிவுடன் விவரிக்கிறது. சமூகம் முன்னேற நீதி போதனையை நுட்பமாக அளிக்கும் நாவல். – டாக்டர் கார்முகிலோன்




