/ ஆன்மிகம் / ஸௌந்தர்யலஹரீ

₹ 150

சங்கரரின் வாழ்க்கை வரலாற்றுடன், 100 ஸ்லோகங்களை உள்ளடக்கிய சௌந்தர்யலஹரீ, பொருளுரையோடு தரப்பட்டுள்ள நுால். வரலாற்று நிகழ்வுகள் நிரல்படத் தரப்பட்டுள்ளன. பிறக்கும் போதே உயரிய அறிவாற்றலோடு விளங்கி, வேதங்களையும் உபநிடதங்களையும் சமஸ்கிருதத்தில் பயின்று, தேர்ந்ததும் பிரம்மச்சரியபருவத்திலேயே பிற குழந்தைகளுக்குக் கற்பிக்கத் தொடங்கி, பின்னர் பெரியவர்களுக்கு இளம் பருவத்திலேயே கனகதாரா ஸ்தோத்திரம் கூறியது, சங்கரரின் தெளிந்த ஞானத்தை வெளிப்படுத்துகிறது. தேவி பராசக்தியின் தோற்றத்தை, கால் முதல் தலை வரை தெய்வீகமாக வருணித்து, பல்வேறு வழிபாட்டுச் செய்முறைகளையும் உள்ளடக்கிய, சௌந்தர்யலஹரீ ஸ்லோகங்களுக்குத் தரப்பட்டுள்ள விளக்கங்கள், முழுமையாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளன. எல்லோருக்குள்ளும் இருக்கும் பிரம்மம் ஒன்று தான் என்று எடுத்துரைத்து, மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று, சிவனே நேரில் தோன்றி உணர்த்தியதால், சங்கரர் அகத்தெளிவு பெற்றதாகக் கூறுவது, மாந்த நேயத்தை விதைக்கிறது. – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை