/ ஆன்மிகம் / ஸ்ரீ ராமகிருஷ்ணரே ஸ்ரீ பக்தாஞ்சநேயர்!
ஸ்ரீ ராமகிருஷ்ணரே ஸ்ரீ பக்தாஞ்சநேயர்!
ராமகிருஷ்ணரின் பெருமைகளை பேசும் ஆன்மிக நுால். நான்கு பகுதிகளை உடையது. ராமகிருஷ்ணரின் வாழ்க்கை நிகழ்வுகளையும், சொற்பொழிவுகளையும், புராண இதிகாச கதைகளுடன் இணைத்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சாரதா தேவி, சீதாதேவி என்ற பகுதி பெண்ணின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. புராண, இதிகாச, இலக்கிய அறிவு குறித்து தெரிவிக்கிறது. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் புராண நிகழ்வுகளுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இணையற்ற இதிகாசமான ராமாயணம் கூறும் ராமர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் பற்றிய கதைகளை சான்றுகளுடன் எடுத்து கூறுகிறது. ராமகிருஷ்ணரின் ஆன்மிக சொற்பொழிவுகளை தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு கையேடாக உள்ள நுால். – வி.ராமலிங்கம்




