/ ஆன்மிகம் / ஸ்ரீ சாரதா தேவி பாகவதம்

₹ 180

சாரதாதேவியே சரஸ்வதி, மகாலட்சுமி என தெளிவுபடுத்தும் நுால். சக்தி வடிவான சாரதா தேவி, நடமாடும் சரஸ்வதியாக விளங்குவதை கூறுகிறது. இருவரும் வெண்ணிற ஆடையில் காட்சிஅளிப்பதை விளக்குகிறது. சரஸ்வதி வீணையிலிருந்து வெளிப்படும் இசைக்கு இணையாக சாரதாதேவி குரல் இருப்பதை கூறுகிறது. அன்னை சாரதாவும் வெண்ணிற ஆடையில் இருப்பதை விவரிக்கிறது. ஆண்டாள் கிளி வளர்த்ததை போல் அன்னை சாரதாவும் வளர்த்த நிகழ்வு கூறப்பட்டுள்ளது. சாரதா தேவியே அஷ்ட லட்சுமியாக அருள்புரிவதாக எடுத்துரைக்கிறது. ஆதி பராசக்தி, விசாலாட்சி என்ற நிலைகளில் பெண்கள் வடிவமாக தோற்றம் அளிப்பதை கூறுகிறது. சாரதாதேவியின் அருட்செயல்களை தெய்வ அம்சங்களுடன் பொருத்தி காட்டும் நுால். – முகிலை ராசபாண்டியன்


புதிய வீடியோ