/ வாழ்க்கை வரலாறு / ஸ்ரீ சூரியநாராயணராவ் ஜி
ஸ்ரீ சூரியநாராயணராவ் ஜி
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை வழி நடத்திய ஸ்ரீ சூரியநாராயணராவ் ஜி வாழ்க்கை வரலாற்றை கூறும் நுால். பிறப்பு, கல்வி மற்றும் சங்கத் தொடர்பு விபரங்கள் தரப்பட்டுள்ளன. அசாத்திய சாதகர் என புகழுடன் விளங்கியதை தருகிறது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக விளங்கியதை எடுத்து கூறுகிறது. ஆன்மிக வாழ்வை கடைப்பிடித்ததுடன், சங்கத்தை கட்டமைக்க செய்த பணிகள் குறித்த விபரங்களும் தரப்பட்டுள்ளன. சங்கத்தை வலுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் படங்களுடன் தொகுத்து தரப்பட்டுள்ளன. செய்திகள் எளிய நடையில் அமைந்துள்ளன. மைசூரில் பிறந்தது முதல், பணிகளில் ஈடுபாடு காட்டிய விபரங்கள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி மலர்ந்துள்ள நுால். – ராம்




