/ ஆன்மிகம் / ஸ்ரீ விநாயகர் புராணம்

₹ 100

விநாயகரின் அவதார வரலாறும், விநாயக சதுர்த்தி விரத மகிமையும், விநாயகர் கோவில்களின் ஸ்தல சிறப்பும், விநாயக மந்திரங்களும் தரப்பட்டுள்ள நுால். விநாயகப் பெருமானின் வரலாற்றுக்கு அடிப்படை ஆதாரம், வடமொழியில் பிருகு முனிவரால் உபதேசிக்கப்பட்ட, ‘பார்க்கவ புராணம்’ என்ற நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது.விநாயகரைத் துதித்து துவங்கும் பணிகள் இடையூறின்றி- நிறைவேறும் என்பதால், இவருக்கு ‘விக்னேசுவரர்’ என்ற பெயர் ஏற்பட்டதென்று குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விரத மகிமையும், பலன்களும் நுாலிற்கு பெருமை தருகின்றன. விநாயக மந்திரங்கள் படிப்போருக்கு மிகவும் உதவும். பயனுள்ள ஆன்மிக நுால்.– டாக்டர் கலியன் சம்பத்து


புதிய வீடியோ