/ கட்டுரைகள் / எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ்

₹ 80

நாடகத்தின் வாயிலாக விடுதலை முழக்கத்தை வழங்கிய தியாகி விஸ்வநாததாஸ் பற்றிய நுால். பிறப்பு குறித்து அரிய தகவல்களை தருகிறது. ‘கொல்ல வந்த கொக்கு! எக்காளம் போட்டு நாளும் இங்கே ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா!’ என் ஆங்கிலேயர் கொடுமையைப் பாடியவர். நாடக மேடையில் உயர் ஜாதியினரால் அவமானப்படுத்தப்பட்ட தகவல்களை எடுத்துரைக்கிறது. இலங்கையில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிராக பாடுகிறார் என்ற காரணத்தை சொல்லி விலக்கப்பட்டுள்ளார். விஸ்வநாததாஸ் வாழ்ந்த வீடு, நினைவில்லம் ஆக்கப்பட்ட வரலாற்றையும் அவரது புகழைப் பரப்பியவர்கள் பற்றிய அரிய செய்திகளையும் தருகிறது. வாழ்க்கை வரலாறு என்பதைத் தாண்டி தகவல்களைத் தரும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை