/ கட்டுரைகள் / சுற்றுச்சூழலும் அறிவியலும்

₹ 100

பக்கம்: 150 சுற்றுச்சூழல் எங்கே கெட்டால் என்ன, எங்களுக்குத் தொழில் மயமாக்குதலே முக்கியம் என்பது இன்றைய நவீன மக்களின் போக்கு. இந்த மேற்கத்திய சிந்தனைகள், அணுகுமுறைகள் காரணமாக, சிலவகைத் தாவரங்களும், விலங்குகளும் அடியோடு அழிந்து போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் தீர்க்கமாக ஆராய்கிறார் நூலாசிரியர். மனிதனுக்கும், இயற்கைக்கும் அல்லது சுற்றுச்சூழலுக்கும் இடையே எத்தகைய உறவுகள் இருக்க வேண்டும். அறிவியல் நோக்கில், சுற்றுச்சூழலை ஆராய்ந்துள்ள பல அறிஞர்களின் கருத்துக்கள், அவர்களது கொள்கை விதிகள், அவர்கள் கண்ட தீர்வுகள் என்று மிக விரிவாகவும், ஆழமாகவும் அலசியிருக்கிறார் ஆசிரியர்.சுற்றுச்சூழல் பற்றி ஒரு தீர்க்கமான தெளிவு பெற விரும்புவோர், தவற விட்டு விடக்கூடாத நூல் இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை