/ வாழ்க்கை வரலாறு / சுய சரிதை
சுய சரிதை
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின் சுயசரிதை நுால். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., சிறையில் செக்கிழுத்தார்; துன்பத்தில் துவண்டு நோய்வாய்பட்டு கொடுமை அனுபவித்து வெளியே வந்தார். நாட்டு விடுதலைக்காக அரும்பாடு பட்டார்.சிறையிலிருந்து வந்தவர் வீட்டுக்கடனை அடைக்க நெல், அரிசி, நெய் வியாபாரம் செய்த அனுபவங்களை, 150 தலைப்புகளில் கவிதையாக்கி மகிழ்ந்தார். கவிதைகளுக்கு அடிக்குறிப்பும் தந்துள்ளார். எளிய தமிழில் எழுதப்பட்ட கவிதைகள்.– ஆ.நடராஜன்