/ வாழ்க்கை வரலாறு / சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்)
சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்)
சீர்திருத்தவாதியாகவும், சாதி மத இன வேறுபாடுகளை சாடிய ஆன்மிகவாதியாகவும், பொதுவுடைமைவாதியாகவும், இந்தியாவின் உயர்வு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகளை சொல்லும் நுால்.உலகின் பார்வையை இந்தியாவின் மீது திருப்பிய வீரத்துறவி. எவரும் சாதிக்க முடியாததை தனி ஒரு மனிதராகச் சாதித்துக் காட்டியவர். குருதேவர் ராமகிருஷ்ணரின் புகழை அகிலம் உணரச் செய்தவர். இத்தகைய பெருமை பெற்ற சுவாமி விவேகானந்தரின் இளமைக்காலம், ஸ்ரீபரமஹம்சரிடம் அவர் பெற்ற அனுபவங்கள், இந்தியாவின் பெருமைகளை உலகுக்கு உணர்த்திய விதம் பற்றி விவரிக்கும் அற்புத நுால்.– இளங்கோவன்