/ சமயம் / தஃப்லே ஆலம் பாதுஷா
தஃப்லே ஆலம் பாதுஷா
சிரியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னன் மகன் தப்லே ஆலம் பாதுஷா பற்றிய நுால். திருச்சியில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி நத்ஹர் வலி தர்கா எனப்படுகிறது.ரோமானிய கொள்ளையர், சிரியாவில் முகாமிட்டிருந்தபோது ஆதம் நபி கனவில் தோன்றி, அரண்மனையில் கொட்டு முழக்குமாறு தெரிவித்துள்ளார். அதை நிறைவேற்றியதால் கொள்ளையர் ஓடி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நுாலில் ராஜராஜ சோழன், குந்தவை வரலாறும் இடம்பெற்றுள்ளது. ஆதித்த கரிகாலன் கொலைக்குப் பின், ராஜராஜனுக்கும் அபாயம் இருந்ததை அறிந்த கருவூரார், பாபா நத்ஹர் அலியிடம் பாதுகாப்பாக அனுப்பிய தகவல் உள்ளது. ராஜராஜன் பட்டத்திற்கு வந்தது பற்றியும் எடுத்துரைக்கிறது. இஸ்லாமியர் மற்றும் சோழ வரலாற்றை இணைத்துள்ள நுால்.– முகிலை ராசபாண்டியன்