₹ 400

நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாறாக மலர்ந்துள்ள நுால். வியப்பு தரும் தகவல்களுடன் விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்தியாவின் மனசாட்சி என்று கருதப்பட்டவர் ரவீந்திரநாத் தாகூர். அவரது வாழ்க்கை மற்றும் சிந்தனைப் போக்கை தெளிவாகச் சித்தரிக்கிறது. மொத்தம், 42 தலைப்புகளில் எளிய நடையில் தகவல்களை தருகிறது. தாகூரின் குடும்ப வரலாறு மற்றும் பின்னணி, அவரது பிறப்பு, வளர்ந்த போது தாக்கம் செலுத்தியோர் பற்றிய விபரங்கள் விரிவாக உள்ளன.இளம் கவிஞராக அவர் பரிணமித்தது, தேசிய விடுதலையில் பங்களிப்பு, நோபல் பரிசு பெற்ற சூழல் என விரிவாக வர்ணிக்கிறது. வெளிநாட்டுப் பயணங்கள், படைப்பின் மேன்மை, அவற்றின் பின்னணி என முழுச் சித்திரமாகக் காட்டுகிறது.நோபல் அறிஞரை அறிய உதவும் நுால்.-– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை