/ கதைகள் / தமிழரின் சிறப்பு...

₹ 130

தமிழ் மக்கள் மற்றும் மொழியின் சிறப்புகளை குறிப்பிடும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழர் வரலாற்று தொன்மை, வீரம், இயற்கை வளம், காதல் பெருமைகளை அறிய தருகிறது. கணியன் பூங்குன்றனார் பாடிய, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சகோதரத்துவ வரிகள், உலகம் முழுதும் மக்களை உறவினர்களாக நேசித்த பண்பை காட்டுகிறது.வயது முதிர்ந்த பெற்றோர், பிள்ளையை பார்க்க ஏங்கும் போது நடக்கும் சம்பவங்களை, ‘பாசம்’ கதை விவரிக்கிறது. தற்காலத்தில் நடக்கும் விஷயங்கள் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளன. போதைக்கு அடிமையான இளைஞன் திடீரென மரணமடையும் போது இறுதி ஊர்வலத்தில் நடக்கும் சம்பவங்களும், அதன் வழியாக கூறும் கருத்துகளும் சிந்திக்க துாண்டும் வகையில் அமைந்த நுால்.– முகில்குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை