தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள்
ஜோதி புத்தக நிலையம், 9ஏ, மேக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை - 61. (பக்கம்: 320 ) பயணத்திற்கு சாலை விதிகள் தேவை. அதுபோல, மொழி வளர்ச்சிக்கு, இலக்கண விதிகள் தேவை. சட்டப் பாதுகாப்பு இல்லாத சமுதாயமும், இலக்கணப் பாதுகாப்பு இல்லா மொழிகளும், தானே அழிந்துவிடும். தமிழின் ஐந்து இலக்கணங்கள், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி. இவற்றில் எழுத்து, சொல் பற்றிய இலக்கணத்தை மாணவர்களுக்கு ஏற்ப, இந்த நூல் மிக எளிமையாகப் புரிய வைக்கிறது. தமிழாசிரியர் அனுபவமிக்க இந்நூல் ஆசிரியர் பெரியண்ணன், மிக நல்ல தமிழறிஞர். இவர் தம்பிகளுக்குச் சொல்லித் தரும் வகையில், எளிமையாக, இனிமையாக, பள்ளி நிலைக்கு ஏற்ப இந்த நூலை எழுதியுள்ளார்.பள்ளியில், மாணவருக்கு பாகற்காயாய் கசக்கும் இலக்கணத்தை, பனிக்கூழாய் (ஐஸ்கிரீமாய்) விளக்கியுள்ளார். வேற்றுமைத் தொகை, வேற்றுமை விளி, வேற்றுமை உருபும், பயனும், உடன் தொக்கத்தொகை மூன்றையும், ஒரே பக்கத்தில் அட்டவணை இட்டு ஒப்பிட்டுள்ளது சிறப்பு