/ தமிழ்மொழி / தமிழ் ஒளி
தமிழ் ஒளி
தமிழில் ஒலி வேறுபாட்டு சொற்களை அடையாளம் காட்டும் நுால். சொற்களை முறையாக உச்சரிக்கவும், பிழை யின்றி எழுதவும் வழிகாட்டுகிறது. ஒரே தன்மையான ஒலி உடைய ல, ழ, ள, ர, ற மற்றும் ந, ன, ணகர எழுத்துகள் அமைந்த சொற்களை எடுத்துக்காட்டுகளாக முன்வைத்து, உச்சரிப்பு வேறுபாடுகளை விளக்குகிறது. புழக்கத்தில் இல்லாத பழஞ்சொற்கள் சிலவற்றுக்கு தற்காலப் பயன்பாட்டு நோக்கில் பொருள் குறிப்பு தருகிறது. ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டி விளக்குகிறது. ஒரே ஒலிப்பில் இரண்டு சொற்கள் வெவ்வேறு பொருட்களை தருவதையும் கவனத்துக்கு தருகிறது. உச்சரிப்பு வேறுபாடுகளை குறிப்புடன் தருகிறது. தமிழ்ச் சொற்களை பயன்படுத்த பயிற்சி தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




