/ கட்டுரைகள் / தமிழ் தமிழன் சிலம்பம்
தமிழ் தமிழன் சிலம்பம்
சிலம்பக் கலை பற்றி வெளிவந்துள்ள நுால். பொருத்தமான படங்களுடன் அமைந்துள்ளது. மொத்தம், 24 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிலம்ப கலை பற்றிய விபரங்களை தெரிவிக்கிறது. அடுத்து கற்கால நிலை பற்றி ஆய்வு செய்கிறது.சமூக மாற்றத்தில் சிலம்ப கலையின் நிலை, மன்னர் கால சிலம்பம் என இந்த கலையின் பரிணாம வளர்ச்சி பற்றி படிப்படியாக தகவல்களை தெரிவிக்கிறது. இறுதியில் சிலம்பத்துடன் இணைந்த கலைகள் பற்றி தனித்தனி தலைப்புகளில் தகவல்களை தருகிறது. சிலம்பக் கலையின் மேன்மையை வரலாற்றுப் பூர்வமாக எடுத்து சொல்லும் நுால்.– ராம்