/ வரலாறு / தமிழகத்தின் தியாகச் சுடர்கள்
தமிழகத்தின் தியாகச் சுடர்கள்
பிரபலமாக பேசப்படாத விடுதலைப் போராட்டத் தியாகிகளை ஆவணப்படுத்தியுள்ள நுால். மறைந்து மறந்து போன பலரையும் தேடித் தந்து உள்ளது.விடுதலைப் போரை முதலில் துவங்கியவர் தமிழக வீரர் பூலித்தேவனும், ஒண்டி வீரனும் தான் என்கிறது. பின்னர் தான் சிப்பாய் கலகம் நடந்ததாக பதிவு செய்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து மடிந்தோரின் தியாக வாழ்வு நெகிழ வைக்கிறது.ஏழைகள் உயர்வுக்காக, 650 ஏக்கர் நிலத்தை பகிர்ந்து வழங்கிய கோபி லட்சுமண ஐயர் சாதனையை அறியச் செய்கிறது. தியாக தீபங்களான அவ்வை டி.கே.சண்முகம், கேப்டன் லட்சுமி, பாஷ்யம், குப்புசாமி கவுண்டர், தினமணி செட்டியார் என பலரையும் காட்டுகிறது. தியாகிகளைத் தேடி கண்டறிந்து தெரிய வைக்கும் நுால்.– முனைவர் மா.கி.ரமணன்