/ கதைகள் / தமிழ்வாணனின் சிறுகதைகள் (பாகம் – 1)

₹ 550

பிரபல எழுத்தாளர் தமிழ்வாணனின் சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ராஜபுத்திர வம்சத்தினரின் உயர்ந்த வைரத்துக்காக நடத்திய படையெடுப்புகள், சிறுகதைகளாக புனையப்பட்டுள்ளன. அந்த வைரம், அவுரங்கசீப்புக்கு கிடைத்தது, அந்த வைரத்திற்கு பட்டை தீட்டியவனை தண்டித்தது என, சுவாரசிய தகவல்களுடன் உருவாக்கப்பட்டுள்ள நுால். புகழ்பெற்ற வைரங்கள் இந்தியாவில் இருந்து பாரசீகம் வரை சென்றது குறித்து விறுவிறுப்புடன் புனையப்பட்டிருக்கிறது. வைரத்தின் ஒளி வீச்சால் ஏற்படும் மாற்றத்தை ஆராய்ந்த விஞ்ஞானி சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்றதாக குறிப்பு உள்ளது. மயிர்க்கூச்செரியும் சம்பவங்கள் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ