/ பொது / தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 128) நமது ராணுவத்தில் ராணுவப் பொறியியல் பிரிவு எவ்வளவு மகா முக்கியமானது, பண்டை காலத்திலும் சரி, சமாதான காலத்திலும் சரி, அது எவ்வளவு மகத்தான சேவை செய்கிறது என்பதை இந்த நூலில் மூலம் அறிந்து மதிக்கலாம்.தனது 31 ஆண்டு கால ராணுவ அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர். கண்ணி வெடிகளால் பலர் மாள இருந்ததை தடுத்து தன் உயிரை தியாகம் செய்த சுபேதார் சுப்ரமணியத்தின் வீரத் தியாகம் மலைக்க வைக்கிறது.அதற்காக பிரிட்டிஷார் மிக, மிக உயர் விருதான ஜார்ஜ் கிராஸ் என்ற வீரப்பதக்கத்தை வழங்க, அதை பெற்ற ஒரே தமிழன் அவர் தான் என்னும் போது நமக்கு மெய் சிலிர்க்கும். இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.