/ இசை, இயல், நாடகம் / தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
புலம்பெயர்ந்த இலங்கை தமிழரின் மன சிக்கல்களை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாடகங்களின் தொகுப்பு நுால். இலங்கை தமிழும் ஆங்கில உச்சரிப்பும் கலந்து அமைந்துள்ளன. மேடையில் நடிக்கவும், புத்தகமாக படிக்கவும் உதவியாக நல்ல கருத்துகள் உள்ளன. எந்த நாடாக இருந்தாலும் தம்பதியருக்குள் சந்தேகம் வந்துவிட்டால், குடும்பத்தில் என்னவெல்லாம் நிகழும் என்று சொல்கிறது, ‘யாருக்கு யார் சொந்தம்’ என்ற நாடகம். சொத்துக்காக பிள்ளைகள் போடும் வேஷத்தை நாடகம் வழியாக அம்பலப்படுத்தும் அப்பாவின் செயல்பாட்டை, ‘அடுத்த வாரிசு’ வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பகை தொடரக்கூடாது என்ற கருத்தை முன்வைக்கிறது, ‘அதோ வானம் விடிகிறது’ என்ற நாடகம். சுவை குன்றாத நாடகங்களின் தொகுப்பு நுால். – சீத்தலைச்சாத்தன்




