/ கட்டுரைகள் / THAMIRAVARUNI Conflicts Over Water Resources

₹ 150

பக்கம்: 200 திருநெல்வேலி மாவட்டத்தைச் செழிப்பாக்குவது தாமிரபரணி ஆறு. தூத்துக்குடி மாவட்டத்தில், சில பகுதிகளிலும் தாமிரபரணி பாய்கிறது. 218 வருவாய்க் கிராமங்களில், இந்தத் தாமிரபரணி ஆறு பாய்ந்து, வளம் சேர்க்கிறது. இந்த ஆறு பாயும் பகுதிகள் செழிப்பாகவும், பிற பகுதிகள் வறண்டும் காணப்படுகின்றன. தாமிரபரணி நீர்ப்பாசனப் பிரச்னை, ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்தப் பிரச்னை எவ்வாறு சமூகப் பிரச்னையாக வடிவெடுத்தது என்பது தான் இதன் உச்சம்.ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்தைய மன்னர் ஆட்சிக் காலம் முதல் கி.பி., 2000 வரை தாமிரபரணி ஆற்றுநீர்ப் பிரச்னையுடன் கூடிய, சமூகப் பிரச்னையை ஆதாரங்களுடன் ஆய்வு செய்கிறது இந்த நூல். பிராமணர், வெள்ளாளர், நாடார், தேவர், பள்ளர் முதலான சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகள் குறிப்பாக, கோவில் நுழைவுப் போராட்டங்களையும் தெளிவுபடுத்துகிறது. திருநெல்வேலி, ராமநாதபுரம் முதலான மாவட்ட மக்களின் சமூக வாழ்க்கையைக் கண்ணாடியாய் காட்டுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் பட்டத்திற்காக, அளிக்கப் பெற்ற இந்த நூலின் ஆங்கில நடை, ஆய்வு நடையாக மிரட்டாமல் எளிமையாக இருப்பது, இதன் சிறப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை