/ கவிதைகள் / தமிழனென்றே சொல்லடா...

₹ 160

சமகால நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, விமர்சனப்பூர்வமாக எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். தார்மீக கோபத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் ஓட்டுக்கு காசு கொடுப்பதில் இருந்து, நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால் ஏற்பட்ட விளைவுகள் வரை பல்வேறு அம்சங்கள் தர்க்கப்பூர்வமாக அலசப்பட்டுள்ளன. மனதில் உணர்வு பிரவாகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. மரங்கள் பேசுவது போன்ற தொனியில் படைக்கப் பட்டுள்ள கவிதைகள் வித்தியாசமாக உள்ளன. இயற்கை செயல்பாட்டை, ‘கூடைகளை அகற்றி கோழிகளை கூவ விடு’ போன்ற வரிகள் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துகின்றன. சமூக இழிவுகளை சாடும் கவிதைகளின் தொகுப்பு நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை