/ சமயம் / தம்மபதம் பவுத்த மத அறநுால்
தம்மபதம் பவுத்த மத அறநுால்
பவுத்த மத அறநுாலான தம்மபதம், எளிய நடையில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அறக்கருத்துக்கள் பொருத்தமான தனித்தனி தலைப்புகளின் கீழ் தரப்பட்டுள்ளன. போதனைகள், 26 குறுந் தலைப்புகளில் உள்ளன. ஒவ்வொன்றிலும், அந்தந்த பொருண்மை சார்ந்த சுலோகங்களின் தொகுப்பு தரப்பட்டுள்ளது. சுலபமாக வாசித்து புரியும் வகையில், இயல்பான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.தத்துவம் சார்ந்த விளக்கங்கள், மிக எளிய நடையில் உள்ளதால் தடங்கலின்றி வாசிக்கலாம். சுலபமாக கருத்தை புரிந்து கடைப்பிடிக்கவும் முடியும். பொன்மொழியாக பயன்படுத்தவும் முடியும். மேடைப் பேச்சிலும் மேற்கோளாகவும் பயன்படுத்தலாம். உன்னதமான கருத்துக்கள் அடங்கிய பேழை இந்த நுால்; அறம் சார்ந்த வாழ்வுக்கு உதவும்.– பாவெல்