/ கட்டுரைகள் / தண்ணீர்... கண்ணீர்...!

₹ 320

தினமலர் நாளிதழில், ‘இதற்காகத்தானா மெனக்கெட்டாய் தமிழா’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். நீர் மேலாண்மையின் அவசியத்தை புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.சோழர் காலத்தில், நீர் ஆவியாவதைக் குறைக்க கடம்ப மரங்களை வளர்த்தது, ஏரிகளுக்கு, ‘ஏந்தல்’ என பெயரிட்டிருந்தது போன்ற செய்திகள் சுவாரசியமானவை. மன்னர் காலத்தில் கடைபிடித்த நீர் மேலாண்மை, நீர் பங்கீடுக்கு உரிய அமைப்புகள், கட்டுமானங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.மழைநீரை சேகரிக்கும் தொழில்நுட்பம், தற்போதைய நீர் தேவைக்கு தீர்வு காண்பதற்கான அணுகுமுறை, ஆலோசனைகளை வழங்கும் நுால். – ரா.சுப்பிரமணியன்


புதிய வீடியோ