/ கதைகள் / தரையில் இறங்கும் விமானங்கள்
தரையில் இறங்கும் விமானங்கள்
இளைஞர்களின் மனதை கவரும் மென்மையான நாவல். பட்டதாரியான விஸ்வம் அறிவு ஜீவி. வருமானம் இல்லாத போதும் விரும்பியபடி இலக்கியம் வாசித்து வாழ்கிறான். ஒரு காதலியும் உண்டு. அழகும், அறிவும் நிறைந்த அவன் அண்ணன் மனைவி இனிமையானவள். படித்த இலக்கியம் குறித்து அவளுடன் விவாதிப்பான். அரட்டை அடித்தபடி பொழுது போக்கும் விஸ்வம், அண்ணியின் அறிவுரையால் வாழ்வில் நிதர்சனத்தை புரிந்து கொள்கிறான். பின், வாழ்வில் திருப்பங்கள் ஏற்படுவதாக கதை நகர்கிறது. ரசனையுடன் கூடிய இயற்கை வர்ணிப்புகள், மாட்டு வண்டியில் ஒளிரும் சிம்னி வெளிச்சம் என நுணுக்கமான காட்சிகள் கதை நெடுக சித்தரிக்கப்பட்டு உள்ளன. எளிமையான உரையாடல்களுடன் உள்ளத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த நாவல். – ராம்




