/ கதைகள் / பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
பரிதவிப்புக்கு உள்ளாக்கும் மனநிலையை ஆராய்ந்து படம் பிடிக்கும் நாவல் நுால். இரண்டு பகுதிகளுடன் உள்ளது. மனித மன உலகின் புதிர்களை அறியும் வகையில் கதாபாத்திர படைப்புகள் உள்ளன. வெவ்வேறு இடங்களில் வாழும் பில்லி பிஸ்வாஸ் பல்வேறு வேலைகளை செய்கிறான்; பலருடன் காதலில் வீழ்ந்து, உறவு சார்ந்த அனுபவம் பெறுகிறான். எதுவுமே அவனை அமைதிப்படுத்தவில்லை. கொந்தளிக்கும் மனதுடன் இருக்கும் அவன் காணாமல் போகிறான். செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த அவனை போலீஸ் தேடுகிறது. கண்டுபிடிக்காமல் வழக்கு மூடப்படுகிறது. பின், இரண்டாம் பகுதி துவங்குகிறது. புதிரும், திகில்களும் நிறைந்து திகைக்க வைக்கிறது இந்த நாவல். – சிவா




