/ சட்டம் / சட்டத்தின் திறப்பு விழா!
சட்டத்தின் திறப்பு விழா!
இலங்கை வானொலி நிலையத்தில் குரல்வழி நிகழ்த்தப்பட்ட நாடகங்களின் தொகுப்பு நுால். சுவாரசியம் தரும் வகையில் யாழ்ப்பாண பேச்சு நடையில் காலப்பெட்டமாக மலர்ந்துள்ளது. சட்டத்தின் திறப்பு விழா, காயாத வடுக்கள், இருபது ரூபா நோட்டு, செய்வினை, தகைமை, மயிர்க் கொட்டிகள், பெட்டிசம், பெறுமதி, அறு வடை என்ற தலைப்புகளில் நாடகங்கள் அமைந்துள்ளன. இலங்கை தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை, கலாசார சிறப்பை எளிய உரையாடல்கள் வழியாக வெளிப்படுத்துகிறது. குறைந்த கதாபாத்திரங்கள், உரையாடல்களில் யதார்த்தம், நகைச்சுவை என பல்சுவையாக வெளிப்பட்டுள்ளது. இலங்கை தமிழரின் மொழி உச்சரிப்பின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. இலங்கை தமிழர் வாழ்வை பிரதிபலிக்கும் தொகுப்பு நுால். – ஒளி




