/ பொது / அச்சுறுத்தும் சிறார் உலகம்
அச்சுறுத்தும் சிறார் உலகம்
குழந்தை வளர்ப்புக்கு ஆலோசனை கூறும் நுால். தற்காலத்தில் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. சிறுவர் உலகம் அச்சுறுத்தக்கூடியதாக இருப்பதற்கு காரணம், கூட்டு குடும்ப முறை சிதைவு என தெளிவுபடுத்துகிறது. பணமயமாகிவிட்ட கல்வி முறை, பெற்றோரின் எண்ணப்போக்கில் மாற்றம் குறித்து விவாதிக்கிறது. பாலியல் ஒழுக்கத்தை குடும்பம், சமூகம், கல்விக்கூடம் இணைந்து தான் பயிற்றுவிக்க வேண்டும் என்கிறது. போதைக்கு அடிமையாதல், ஆன்லைன் சூதாட்டம், பாலியல் சீண்டல்கள் பெருகி வருவதை சுட்டிக்காட்டுகிறது. குழந்தை வளர்ப்புக்கு வழிகாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன்




