/ கதைகள் / தீர்க்காயுசு

₹ 200

எதார்த்த நடையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்து கதைகளும் உள்ளத்தில் அப்படியே நங்கூரமிட்டு விடுகின்றன. சிலர் தோற்றத்தில் பந்தாவாக இருந்தாலும், உள்ளத்தால் குழந்தை போல் இருப்பர். இதை, ‘அன்பு’ என்ற தலைப்பில் அருமையாக உரைக்கிறது. வாழ்ந்து சலித்து வெறுத்து போனோருக்கு தீர்க்காயுசு என்பது எத்தகைய தண்டனை என்பதை வலிக்கும்படி சித்தரிக்கிறது இன்னொரு கதை. இரண்டு மனைவியுடையோர் வாழ்வு எவ்வளவு சிக்கலும் ஆபத்தும் நிறைந்தது என கண்முன் காட்டுகிறது மற்றொரு கதை. நிஜமாக நடந்ததை போல் உணர வைக்கிற கனமான கதைகளும் உள்ளன. ‘நல்ல தம்பதி’ கதையைப் படித்தால் மனம் கனப்பது நிச்சயம். தரமான சிறுகதைகளால் அலங்கரிக்கப்பட்ட அருமையான நுால். – டாக்டர் கார்முகிலோன்


சமீபத்திய செய்தி