/ ஆன்மிகம் / தீதும் நன்றும் பிறர் தர வாரா!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
இறைவனை அறிய ஆறு வழிகள் குறித்து விவரிக்கும் நுால். வேதத்தின் மூன்று பிரிவுகள் பற்றியும் கூறுகிறது. மனம், புத்தி, ஆத்மா நுட்பமானது என்கிறது. இறந்த பின், நற்செயல்கள் மட்டுமே உடன் வரும் என விவரிக்கிறது. சத்துவம், ரஜஸ், தாமச குணங்களின் இயல்பு பற்றி விவரித்து, முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கரியப்பா பொறுப்பேற்ற வரலாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இறைவனிடம் செய்ய வேண்டிய ஐந்து பிரார்த்தனைகள் மற்றும் தேவ ரகசியம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. பக்தி, கர்ம யோகம் பற்றியும் பட்டினத்தார், சேக்கிழார், போதிதர்மரின் ஆன்மிக சிந்தனைகள் பற்றியும் குறிப்பிடுகிறது. நிம்மதியாக வாழ வழிமுறை கூறும் நுால். – புலவர் சு.மதியழகன்




