/ பொது / தென்னிந்திய ஈமச் சடங்குகள்

₹ 150

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட இந்தியாவின் தென்மாநிலங்களில் மக்களிடம் நிலவிய பழக்க வழக்கங்களை அறிய தரும் நுால். மக்கள் பின்பற்றிய மரணச் சடங்கு நடைமுறைகளை கள ஆய்வு செய்து தெளிவாக தெரிவிக்கிறது. பழங்குடி இனத்தவர் பின்பற்றிய நடைமுறைகளுடன், முன்னேறிய வகுப்பினர் கடைப்பிடித்த முறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. பல இன மக்கள் குழுக்களின் வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. ஒரு மனிதனின் இறப்புக்கு பின், ஆன்மா மேன்மை அடைவதற்காக செய்யப்படும் ஈமச் சடங்குகள் விரிவாக தரப்பட்டுள்ளன. அந்த முறைகளில் நுணுக்கங்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதை அறிய தருகிறது. பழங்கால பண்பாட்டில் நடை முறை குறித்த ஆவணமாக விளங்கும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை